மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம்.
குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காதல் கைகூடும் நாளாக இருக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத செலவினை கட்டுப்படுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.