Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பாக்கிகள் வசூலாகும்..! அன்பு வெளிப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

அவமதித்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் நிலவை பணியை நிறைவேற்றி விடுவீர்கள். பெண்கள் புத்தாடை ஆபரணம் பெற நல்ல நாளாக இருக்கும். எடுத்த காரியங்களில் நிதானம் கடைபிடிக்க வேண்டும். நண்பர்களிடம் பக்குவமாக பழகிக்கொள்ளுங்கள். நல்ல விதமாக பேசுங்கள். குறைகள் சொல்ல வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுக்கு ஆளாக வேண்டாம். எச்சரிக்கையாக நடந்து கொண்டால் போதுமானது.எந்த ஒரு காரியத்திலும் சாதகமான பலனை அடைய வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்கள் பொழுது எச்சரிக்கை வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான சூழ்நிலை காணப்படும். தன்னிச்சையான முடிவு தன்னம்பிக்கை கொடுக்கும். குடும்பத்தாரின் அன்பு வெளிப்படும்.

கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லை. காதல் கைக்கூடி முன்னேற்றம் உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் கடவுளை வணங்கி எள்ளு கலந்த சாதத்தை, தயிர் சாதத்தையும் காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |