மகரம் ராசி அன்பர்களே…! பணிகளை திறம்பட செய்வதால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியினால் நிலுவைப்பணம் வசூலாகும். முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்க கூடும். உங்களது வேலை கண்ட ஊழியர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை சரியாகும். செல்வநிலை சீரும் சிறப்புமாக இருக்கும். இறுக்கமான சூழ்நிலை மாறும். குழப்பம் விலகிச் செல்லும்.அரசியல் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். எச்சரிக்கையான பேச்சு அவசியம். வசீகரமான தோற்றத்தை பெற்றவர்கள். பெண்கள் சினேகம் கிடைக்கும். சீரான முன்னேற்றம் இருக்கும். தனவரவு கையில் வந்து புரளும். குழப்பங்களில் இருந்து கொண்டே இருக்கும். யாரிடமும் ரகசியங்களை பற்றி பேச வேண்டாம். தொழில் ரகசியங்களை பாதுகாத்து ஆகவேண்டும்.
கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்து சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலையில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வட மேற்கு.
அதிஷ்ட எண் 1 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் இளம் பச்சை நிறம்.