Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! பொறுப்புகள் கூடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! வழக்கத்துக்கு மாறான பணி தொந்தரவைக் கொடுக்கும்.

செயல் நிறைவேற கூடுதல் கவனம் வேண்டும்.சந்திராஷ்டமம் தினம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணத்தின் போது கவனம. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். முக்கியமாக ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. பணம் விஷயத்தில் பொறுப்பை ஏற்கக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். அரசுத் துறையில் இருப்பவர்கள் ரொம்ப கவனம் வேண்டும். குடும்பத்தில் சிக்கனச் அளவு இருக்க வேண்டும். தேவையில்லாத கடன்  பெறுவதை தவிர்க்க வேண்டும். இரவல் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினை இருக்கக்கூடும். வருமானத்திற்கு குறை இல்லை. திட்டமிட்டு சேமித்தல் வேண்டும். எதிலும் அலட்சிய போக்கு காட்ட வேண்டாம். கோபப்படாமல் சிரிப்போடு அனைவரிடமும் பழக வேண்டும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்து நடக்க வேண்டும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பூர்வீக சொத்து லாபம் தாமதப்படும். ஆன்மீக நாட்டம் இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பேச்சில் அன்பு வெளிப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 6.

அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |