மீனம் ராசி அன்பர்களே…! எதிர்பார்த்த காரியம் வெற்றி செய்தியை பெற்றுக் கொடுக்கும்.
நண்பர்கள் உங்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். தொழில் வியாபாரத்தில் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் தன வரவு வந்து சேரும். சிறு சிறு உடல் உபாதை ஏற்படும். உங்களின் சொந்த விஷயத்தை யாரிடமும் பேச வேண்டாம். மாற்றுக்கருத்து உள்ளவர்களிடம் எச்சரிக்கை வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தூங்குவதற்கு சிரமம் எடுத்துக் கொள்வீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை வெளிப்படும். மற்றவர்களின் பாராட்டை எளிதாக பெறுவீர்கள். கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் இருக்கும்.மற்றவர்கள் உங்களை பார்த்து ஆச்சரியப் படக் கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். வீன் செலவை கட்டுப்படுத்த பாருங்கள். ஆன்மீக நாட்டம் செல்லும். விலை உயர்ந்த பொருட்களை கடனாக யாருக்கும் கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு சிறப்பான தருணம் அமையும். கடன் பிரச்சினை சரியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நிலைத்து காணப்படும்.
காதல் கைக்கூடி முன்னேற்றமான தருணமாக அமையும்.மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8.
அதிர்ஷ்ட நிறம் பிங்க் மட்டும் நீல நிறம்.