தனுசு ராசி அன்பர்களே…! செல்வாக்கு உயரும் நாளாக இருக்கும்.
வழக்குகள் சாதகமான பலனை கொடுக்கும்.பணியாளர்களால் இருந்துவந்த பிரச்சினை படிப்படியாக சரியாகும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். உங்களுடைய பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பொதுவிடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கலந்து கொள்வீர்கள். எதிலும் முடிவெடுக்க முடியாமல் சில தடுமாற்றம் இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும்.முக்கிய நபரின் சந்திப்பு அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத சிறு திருப்பம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை இல்லை. சில நண்பர்களிடம் கவனமாக நடந்துகொள்ள பாருங்கள்.காதலில் உள்ளவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாணவர் கண்மணிகள் நல்ல முறையில் படிக்க வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.