விருச்சிகம் ராசி அன்பர்களே..!
ஆன்மீக விழிப்புணர்வும் ஈடுபாடும் மனமகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று அனுபவத்தின் மூலம் பாடம் கற்க நேரலாம். பணி வளர்ச்சி சற்று கூடுதலாக இருக்கும். இன்று அதிக பணிகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.
உறவுப் பிணைப்பு வலுவற்றதாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க நட்பான அணுகுமுறையை மேற்கொள்வது சிறந்தது. இன்று நிதிநிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே எந்தவொரு செயலையும் திட்டமிட்டு செயல் படுத்துங்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். கால் வலி மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. இன்று அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.