Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! குடும்பத் தேவை பூர்த்தியாகும்…! பிரச்சனைகள் அகலும்…!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும், எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் வாய்ப்புகளை நழுவ விடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைவழு அதிகமாக இருக்கும். மாணவர்கள் மேற்கொள்ளும் திடிர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:2.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |