ரிஷபம் ராசி அன்பர்களே..!
பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான பேச்சினால் ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். இறைவனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவைக் கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீகபக்தி அதிகரிக்கும். காதலில் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் தேர்தல் நாள் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.