நாளைய பஞ்சாங்கம்
31-08-2020, ஆவணி 15, திங்கட்கிழமை, திரியோதசி திதி காலை 08.49 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.
திருவோணம் நட்சத்திரம் பகல் 03.04 வரை பின்பு அவிட்டம்.
அமிர்தயோகம் பகல் 03.04 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
ஓணம் பண்டிகை.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
ஹயக்ரீவர்- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
நாளைய ராசிப்பலன் – 31.08.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சந்தோஷ காரியங்கள் உண்டாகும். குழந்தைகள் பெருமை படும்படி இருப்பார். தொழிலில் இருப்பவர்களுக்கு தொழிலுக்கு ஏற்ப பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
உங்கள் இராசிக்கு குழந்தைகள் மூலம் தேவையற்ற செலவு ஏற்படும். தொழிலில் தேவையற்ற செலவை செய்யக்கூடும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் வார்த்தைகள் புதிய ஊக்கத்தைக் கொடுக்கும்.
மிதுனம்
உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் தேவை இல்லாமல் மன உளைச்சல் ஏற்படக்கூடும். வீண் பேச்சை தவிர்க்கவும். உத்யோகத்தில் பெரிய முதலீட்டை தவிர்ப்பது உத்தமம் ஆகும். வண்டிகளில் செல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். சுபகாரியங்களை சிறிது நாள் தள்ளி வைக்கவும்.
கடகம்
உங்களின் ராசிக்கு சுப செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் அகலும். பொன்னும் பொருளும் சேர வாய்ப்பு.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் சில செய்திகள் கிடைக்கும் அதில் மனநிம்மதி ஏற்படும். உடல்நிலை சீராக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்க நேரும். முதியவர் இதில் வெளியூர் பயணம் அனுகூலத்தை உண்டாக்கும். வங்கியில் சேமிப்பு உயரக்கூடும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் செலவு பெருகும். தொழிலில் எடுக்கும் சில முயற்சி தடங்களை தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் துணை உண்டாகும். தொழிலில் சுமை குறைந்து இருக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பணம் விஷயங்களில் சிறிது நெருக்கடி ஏற்படும். முயற்சி எடுப்பதினால் சிறிது தாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. ஏதேனும் நினைத்த காரியம் நடக்க வேண்டுமானால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு செயல்கள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும். தொழிலில் இணைத்த இடமாற்றம் பெறுவீர். வீட்டில் இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் நண்பர்களின் ஒத்துழைப் பால் உதவி பெருகும். பழைய கடன் வசூலாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குழந்தைகளின் படிப்பு செலவு கூடும். சுப காரியங்களில் தாமத நிலை ஏற்படும். சேமிப்பு பணம் குறையும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் அகலும். சிக்கனமாக இருப்பதனால் கடன் தொல்லை நீங்கும். கடவுள் தரிசனம் மன குழப்பத்தை நீக்கும் நிம்மதியை பெருகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் உற்சாகத்துடன் செய்வீர்கள். ஆடம்பர பொருளை வாங்க ஆர்வம் கொள்வீர். வீட்டில் சுப காரியங்களில் செலவு கூடும். உறவினர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் புதிய கூட்டணி உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பணவரவு மந்தமா தான் இருக்கும். சீக்கிரம் முடிய இருக்கும் காரியங்கள் கூட சற்று தாமதம் அடையும். தொழிலில் அதிகாரிகள் தொல்லை இருந்தாலும் சக ஊழியர்களால் நம்பிக்கை இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர். குழந்தைகள் மூலம் சுப செலவுகள் ஏற்பட நேரும். தொழிலில் போட்டி பொறாமைகள் அகலும். புதிய வாகனங்களை வாங்க ஆசைப்படுவீர்கள். புதிய நண்பரின் துணை கிடைக்கும். குடும்பத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.