Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் குறையும்..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும்.

மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும்.

அடுத்தவர்களை நம்பி எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். சுய சிந்தனை அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். பேச்சாற்றலால் அனைவரையும் கவர்வீர்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படக்கூடும். என்று காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |