துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். வேலை தொடர்பான பயணம் காணப்படும். உங்களின் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. இன்று உங்களின் உறவில் நல்லிணக்கம் குறைந்தே காணப்படும்.
உங்களின் வீட்டுப் பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். அவர்களின் நலனிற்காக நீங்கள் பணம் செலவுச்செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.