மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் தேவையின் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள். அதிக பொறுப்புகள் காரணமாக மும்முரமாக இருப்பீர்கள். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது. தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக பணியாளர்களுடன் அமைதியின்மை காணப்படும்.
இன்று உங்களின் துணையுடன் நல்லுறவு காணப்படாது. தேவையற்ற மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் குடும்பத்திற்காக நீங்கள் பணம் செலவுச் செய்யும் வாய்ப்பும் உள்ளது. தேவையற்ற செலவுகளை தவிர்த்துவிடுதல் நல்லது. கால்வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.