மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து நலன்களும் உங்களைத் தேடிவரும்.
காரியத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் பல வழியில் வந்துசேரும். ஏற்றம் தரும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் நல்ல தீர்வு கிடைக்கும். சிக்கல்கள் தீர்ந்து இனிமையாக இருப்பீர்கள். செயல்திறன் மூலம் பாராட்டுகளும் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். மனைவி மூலம் முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். தெய்வத்திற்காக சிறு தொகையை செலவிடுவீர்கள்.
தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையேகொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.