சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
உங்களின் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று சுமாரான பலன்களே காணப்படும். உங்களின் பணிகளில் வெற்றிப்பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிகளை திறமையாக முடிக்க சிறப்பாக திட்டமிட வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக உங்களின் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். நிதிவளர்ச்சி திருப்திகரமாக காணப்படாது. சளி, இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்து விடுதல் நல்லது. மாணவர்களுக்கு யோகா தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.