கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள்.
வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.