மேஷம் ராசி அன்பர்களே…! இன்று உங்களிடம் உதவி பெற்றவர் அலட்சியமாக நடந்து கொள்வார்.
நீங்கள் அவரைப் பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம். உங்கள் வேலை ஒன்று நீங்கள் ஒன்று என்று இருப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர் ஆதரவாகத்தான் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களையும் செய்வீர்கள். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக கடுமையாக உழைப்பீர்கள். இன்று புதிய முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். புதிய தொழிலில் நாட்டம் செல்லும். ஆர்வம் அனைத்து விஷயங்களிலும் மிகுந்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது ரொம்ப நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்கள் மீது ரொம்ப கவனமாக இருங்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். யாரிடமும் பேசும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். கூடுமான வரை அனைவரிடமும் அன்பாகவே நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கொஞ்சம் இருக்கட்டும்.
பொருளாதார ரீதியாக சில இடையூறுகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். தடைகளை தாண்டித்தான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். இன்று நட்புடன் பழகும் போது ரொம்ப கவனம் வேண்டும். காதலர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண் :2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.