Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிதானம் தேவை..! முன்னேற்றமான நிலை காண்பீர்..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றிக்காண கடினமாக உழைக்க வேண்டும். பணியிடச்சூழல் சிறப்பாக செயல்படுவதற்கு இன்று சாதகமாக இருக்காது. இன்று உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் வேண்டும்.

இன்று உங்கள் துணையிடம் சகஜமாக நடந்துக் கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடுங்கள். உற்சாகமாக இருந்து மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று உங்களை நிதிநிலையில் வரவும், செலவும் இணைந்து காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. தோல் மற்றும் கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |