இன்றைய பஞ்சாங்கம்
04-05-2022, சித்திரை 21, புதன்கிழமை, திரிதியை திதி காலை 07.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சதுர்த்தி விரதம்.
விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் இரவு 09.15.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் – 04.05.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிட்டும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல செய்தி கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோக ரீதியாக வேலைபளு அலைச்சல் இருந்தாலும் அதற்கு ஏற்ப அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைக்கும் செயல்கள் பாதியில் தடைபடலாம். பிள்ளைகளால் சிறுசிறு மனகஷ்டம் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றேர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு எடுக்கும் காரியங்களில் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாமல் கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.55 மணி சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது தற்சமயத்திற்கு நல்லது.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்னைகளால் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரிதீயாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக வேலைபளு அதிகரிக்கலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் ரீதியாக உள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய பொருட்கள் சேரும்.