கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும்.
பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும். கூடுமானவரை வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். தந்தையிடம் அன்பு பாராட்டுங்கள். செலவினங்களை கற்றுக்கொடுத்த முயற்சியுங்கள். முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
நல்ல வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். இன்று உங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம்தரும் சூழல் அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.