மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு சிறப்பாக இருக்கும்.
பெரியோர்களிடம் நேசம் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பது மகிழ்ச்சியளிக்கும். இன்று வசீகரத்தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். செய்யக்கூடிய முயற்சியில் தெளிவு உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.