கும்பம் ராசி அன்பர்களே..!
தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும்.
சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். மனதிலிருந்த குழப்பங்கள் சரியாகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
உற்சாகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். கரும்பச்சை நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: கரும்பச்சை மற்றும் நீல நிறம்.