மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய முயற்சிகளில் சிறிய தடைகள் அவ்வப்போது வந்து செல்லும்.
உங்களுடைய பேச்சு உறுதித்தன்மை இருக்கும். சிலரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி பெறும். தடைகளை தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். இன்றும் உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அன்பாக நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம்.
குடும்பத்தாரிடம் ஒற்றுமை பேணுவது ரொம்ப நல்லது. இன்று எந்த ஒரு காரியத்திலும் ஓரளவு முன்னேற்றம் இருப்பதால் கொஞ்சம் மனம் வருத்தப்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாகவே செல்லுங்கள். பண வரவு சீராக தான் இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். சக மாணவர்களிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வாக்கு வாதங்கள் வேண்டாம். அதைப்போல் விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று விவசாய துறையில் உள்ளவர்கள் கொஞ்சம் கடினமான சூழ்நிலை பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். புதிதாக எந்த ஒரு கடனும் வாங்க வேண்டாம். காதலர்கள் இன்று பேச்சுவார்த்தையின் போது கோபம் இல்லாமல் பேசுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுங்க. அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.