துலாம் ராசி அன்பர்களே..!
இன்று அதிக சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம்.
இன்று உங்களின் இலக்குகளை அடைய முடியாதபடி சில தடைகள் ஏற்படும். இன்று பணிகள் அதிகமாகவே காணப்படும். பணியிடத்தில் கடுமையான சூழ்நிலையை சமாளிப்பதில் கடினமாக உணர்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் குறைந்த அளவு பேச்சை வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் அமைதியின்மை ஏற்படாமல் இருக்க இது மிகவும் அவசியமாகும். இன்று உங்களின் கையில் போதியளவு பணம் இருக்கும்.
வீண் விரையங்கள் ஏற்படும். எனவே செலவிடும் போது கவனம் தேவை. இன்று உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் ஆறுதல் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் சற்று மந்தநிலை நிலவும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.