துலாம் ராசி அன்பர்களே..!
இன்று சோதனையான நாளாக இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். சிறிய செயல்களை முடிக்க கடுமையான முயற்சி தேவைப்படும். சக பணியாளர்களுடன் உறவு நல்லுரவாக இருக்காது.
இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்பான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இதனால் செலவுகளும் அதிகமாக இருக்கும். செலவுகளைத் தவிர்க்க கண்காணித்து கட்டுப்படுத்த முயற்சிசெய்ய வேண்டும். நீங்கள் எதிலும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.