ரிஷபம் ராசி அன்பர்களே…!
நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
அது உங்களுக்கு உதவியாக ஆறுதலாகவும் இருக்கும். இன்று நீங்கள் எதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று பணியில் கவனம் தேவை. உங்களை நீங்கள் மேம்படுத்தும் வகையில் பணியாற்றுவீர்கள் இதனால் பணியில் தவறுகள் குறையும்.இன்று நீங்கள் உங்கள் துணையுடன் பேசும் பொழுது கவனம் தேவை. இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பணம் அதிகமாக செலவாகும். பண விஷயத்தில் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திற்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று சாதுரியமாக முடிவு எடுங்கள். உணவில் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவு உட்கொண்டால் தொண்டையில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண் 5.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.