மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. இன்று பணியில் சில தவறுகள் நேர வாய்ப்புள்ளதால், பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து மேற்கொள்ளவேண்டும்.
சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை காணப்படும். உணர்ச்சிப் பூர்வமாக நடந்துக்கொள்வதன் மூலம் பிரச்சனை ஏற்படலாம். நல்லுறவு ஏற்பட இத்தகைய உணர்வுகளை தவிர்த்து விடுதல் நல்லது. இன்று உங்களின் நிதிநிலை மகிழ்ச்சிகரமாக இருக்காது, இதை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இந்த பதட்டம் மற்றும் அசௌகரியம் காரணமாக உங்களுக்கு மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்தநிலை காணப்படும். இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.