தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சில தடைகளுக்குப்பின் வெற்றி காண்பீர்கள் என்றாலும் சிறப்பாக திட்டமிடுதல் வேண்டும்.
கடின உழைப்பு மூலம் நீங்கள் வெற்றி பெறமுடியும். உங்களின் பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட வேண்டும். உங்களின் துணையிடம் மனம் திறந்து நட்பாக பேசுவதன் மூலம் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். இதன்மூலம் நல்லுறவும் உறவில் திருப்தியும் ஏற்படும். பணம் வரவு செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். எதிர்பாராத வகையில் பணவரவு காணப்படும். முறையாக ஓய்வு எடுப்பதன்மூலம் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். கால் மற்றும் தொடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா மேற்கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லபலன் பெறலாம். இன்று நீங்கள் சிவவழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.