ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும்.
தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.
அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். சிந்தித்து செயல்படுவது நல்லது. அனுகூலமான பலனை அடைவீர்கள். கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம்பச்சை நிறம்.