ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எதார்த்தமாகவும் தொழில் சார்ந்த அணுகுமுறையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பணிகளை சிறிது கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். பணிகளை திட்டமிட்டு ஆற்றவேண்டும்.
இன்று காதலுக்கு உகந்த நாளல்ல. இன்று உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. இன்று பணயிழப்பு ஏற்படாமல் இருக்க பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியம் சிறந்துக் காணப்படும். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.