கும்பம் ராசி அன்பர்களே…!
கடந்தகால ஒழிப்பிற்கு இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் அதை சுமுகமாக முடித்து வைப்பீர்கள். இன்று உங்களுக்கு நண்பர்களின் உதவியும் கிடைக்கும். பெண்கள் இன்று தாய் வீட்டாரின் அன்பை பெறுவீர்கள். உற்றார் உறவினரின் அன்பை பெற முடியாமல் சிலருக்கு கடினமான சூழல் ஏற்படும்.
சிலருக்கு வீடு மாறக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு உடன் இருப்பவர்களால் சில பிரச்சினைகள் நேரிடும். இன்று நீங்கள் அனைவரிடத்தும் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய மன கஷ்டங்களை உங்கள் நண்பர்களிடம் பகிர வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. அருகில் மற்றும் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.
நிதி நிலைமையை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் செலவு செய்யுங்கள். உங்களுக்கு குடும்ப தேவைகள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே குடும்பத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்மை மற்றும் தீயதை நல்ல ஆலோசித்த செயல்படுங்கள். இன்று உங்கள் பணியில் கவனம் தேவை அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் சூழ்நிலையை மனதில் வைத்து நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுங்கள். உங்கள் குடும்பத்திலுள்ள பெரியோர்களை மதித்து நடங்கள். காதலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை.
அவசரம் காட்டுவதை தவிர்த்தல் நல்லது.
பழைய எண்ணங்களிலிருந்து தேவையில்லாத பிரச்சினைகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்தே காணப்படும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.