Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வெற்றி கிட்டும்..! செல்வம் பெருகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் நீங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நாளாக இருக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலையும் உயர்ந்துவிடும். விஐபிக்களின் சந்திப்புகள் மற்றும் புகழ் மிக்கவர்களின் சந்திப்புகள் உங்களுக்கு கிடைக்கும். காலையிலேயே உங்களுக்கு தொலைபேசியின் மூலம் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும் நாளாகவே இருக்கும். வழக்கு விவகாரங்கள் கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அளிக்கும். நீங்கள் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகளும் பெறுவீர்கள்.

சுப நிகழ்வுகளில் இருந்த தடைகளும் இன்று உங்களுக்கு நீங்கும். இன்று உங்களுக்கு பணி சுமை அதிகமாகவே இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உட்கொண்டால் உங்களுக்கு சிறந்தது. நீங்கள் இன்று சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர விஷயங்களில் மட்டும் நீங்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது சிறந்தது.
இன்று நீங்கள் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. கணவன் மனைவி இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பிரச்சினைகள் ஓரளவு சுமுகமாக தீர்ந்து விடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் மழலை செல்வம் கிட்டும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இந்த நீங்கள் கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். மேற்கல்வி கற்க நீங்கள் செய்யக்கூடிய அனைத்து முயற்சியும் வெற்றி வாய்ப்பு உண்டாகும். அரசு
தேர்வுகாக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இன்று நல்லதே நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |