Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பொறுமை தேவை..! வரவு உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இந்த யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கிறது.

இன்று உங்களுக்கு எல்லாம் காலதாமதமாகி தான் நடக்கும். குடும்ப பெரியோர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு மதித்து நடப்பது சிறந்தது.
நீங்கள் எதிலும் அவசரம் காட்டாதீர்கள்.
சில நண்பர்கள் உங்களுடைய செயல்பாட்டில் குறை கண்டு பிடிக்கக் கூடும். அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். குறை சொல்பவர்கள் உங்களை குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் நீங்கள் எதை பற்றியும் சிந்திக்க வேண்டாம். உங்களை உதாசீனப்படுத்திய வர்கள் பற்றி நீங்கள் என்னைக்கும் நினைத்து பார்க்காதீர்கள். எதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் உங்கள் வேலையை மற்றும் நீங்கள் கவனமாக செய்யுங்கள். உள்ளவர்களுக்கு லாபம் வராவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்.  ஓரளவு சுமாராகவே உங்களுக்கு வரவு கிட்டும் அதை வைத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்களை படித்து பார்த்த பின்னரே கையப்பம் இடுவது சிறந்தது. உங்களுக்கு தொழில் தொடர்பான செலவுகள் கூடும். வேலை சம்பந்தமான பயணங்கள் இன்று உங்களுக்கு திடீரென்று ஏற்படும். சிறிய வேலைக்காக நீங்கள் அதிக கடினமாக உழைக்க நேரிடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் சரியான நேரத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது சிறந்தது. வயிற்று எரிச்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் வெளிவட்டாரத்தில் மற்றவரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை.
புதிய நபர்களிடம் தொழில் ரகசியமான எந்த ஒரு விஷயத்தையும் பேச வேண்டாம். கொடுக்கல் வாங்கல் உங்களுக்கு இந்த சீராகவே இருக்கிறது. திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை இல்லாத வாழ்வு அமையும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் எச்சரிக்கையுடன் புரிந்து கொள்வது சிறந்தது. அவசரப்பட்டு வார்த்தைகளை மட்டும் விட்டுவிட வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் கல்விக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கல்வி கற்பது சிறந்தது. படித்த பாடத்தை படித்தபின் கண்டிப்பாக எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. அரசுத்தேர்வுகள் முயற்சி செய்யும் மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வது சிறந்தது. நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது ப்ரவுன் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
இன்று நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறந்தது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |