Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (26-05-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

26-05-2022, வைகாசி 12, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.54 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

ரேவதி நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு அஸ்வினி.

சித்தயோகம் இரவு 12.38 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

இன்றைய ராசிப்பலன் – 26.05.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படுவது உத்தமம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும். தரும காரியங்கள் செய்வதில் ஆர்வம் அதிகமாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளி வட்டார நட்புகள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். எதையும் சிந்தித்து செய்வது நல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து சற்று முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.

மீனம்

உங்களின் ராசிக்கு ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

Categories

Tech |