Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! புத்துணர்ச்சி உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.

இன்று பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் என்பது அவசியம். வாகனத்தில் வேகமாகச் செல்லக் கூடாது வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நண்பர்களிடமிருந்து இன்று உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
எதிர்பாராத திருப்பங்களால் உங்களுக்கு காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய நாளில் தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். இன்று தொழிலில் முன்னேற்றகரமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்து விடும். இன்று உங்களுக்கு எந்த அளவிலும் பெரிய பிரச்சினை வர வாய்ப்பு இல்லை.

இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவது சிறந்தது. இன்று உங்கள் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் இன்று கொஞ்சம் கண்காணித்துக் கொள்வது மிக சிறப்பு.
அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. இன்று உங்களால் முடிந்தால் ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் செயல்பட கூடிய அமைப்பும் உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசு தேர்விற்கான பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |