Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நிதானம் வேண்டும்..! கட்டுப்பாடு தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் அடுத்தவருடைய விஷயத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லாதீர்கள்.

இன்றைய நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு குடும்பத்தேவை ஓரளவுதான் பூர்த்தி அடையும். அத்தியாவசிய தேவைக்காக நீங்கள் கொஞ்சம் பண கடன் வாங்க வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நீங்கள் சரி செய்வது நல்லது. இன்று உங்களுக்கு பிள்ளைகளால் நன்மை உண்டாகும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து போவார்கள். தொலைந்துபோன பொருளும் உங்கள் கையில் வந்து சேரும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணைக்காக சிறிது செலவு செய்ய நேரிடும்.

இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு முதுகுவலி தோள்வலி தலைவலி வர வாய்ப்பு உள்ளது. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு கொஞ்சம் மருத்துவ செலவு கூட வர வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது கவனம் தேவை. இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு கூடும். காதலில் உள்ளவர்களுக்கு காதலும் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் விளையாடும் பொழுது எச்சரிக்கை அவசியம் ஆகும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |