Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (26-10-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

26-10-2020, ஐப்பசி 10 , திங்கட்கிழமை, தசமி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.

நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

விஜய தசமி.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

 எம கண்டம்- 10.30 – 12.00,

 குளிகன்- மதியம் 01.30-03.00,

 சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

நாளைய ராசிப்பலன் –  26.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். சுப காரியங்களில் சாதகமான பலன் இருக்கும்.குழந்தைகளின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு இருக்கும். உத்தியோகத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு இனிய செய்திகள் வீடு தேடி வரும். குழந்தைகளால் சுப செலவு இருக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாகவே கிடைக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். உத்யோகத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்தியான நிலை இருக்கும். சேமிப்புகள் உயரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். உடல்நிலையில் மந்தநிலை இருக்கும. சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடைகள் உண்டாகும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மன உளைச்சல் ஆக இருப்பீர்கள். உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் உத்தியோகம் சம்பந்தமாக விஷயங்களில் கவனமாக இருங்கள் அதுவே உத்தமம். இரவின் விஷயங்களில் தலையிடாமல் இருங்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களின் வாயிலாக சுப செய்திகள் வீடு வந்து சேரும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.திருமண காரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். பெரியவர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் சிறப்பாக இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த ஒரு செயல் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பெரியவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தெய்வ வழிபாடு இருக்கும். உத்தியோகத்தில் வருமானம் கூடும். கடன் தொல்லை தீரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு உண்டாகும்.புதிய உத்தியோகம் தொடங்கும் முயற்சிகளில் இடையூறு உண்டாகும். எந்த செயல் செய்தாலும் அதை போராடி செய்வீர்கள். நண்பர்களின் ஆலோசனை பிரச்சனைகளை தீர்க்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் வீண் செலவு உண்டாகும். உறவினர்கள் மூலம் வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். சிக்கனமாக இருந்தால் கடன் தொல்லை தீரும்.எந்த செயல் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செய்யுங்கள். அனுகூல பலன் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நம்பிக்கை தெம்பு உருவாகும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் நிலை சீராகும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் இருக்கும். தொழில் ரீதியில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளின் நெருக்கடி இருக்கும். பொறுமை களை கடைப்பிடித்தால் பிரச்சனைகள் தீரும். மனைவிவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் சுப செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளி வருவார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் செய்ய முடியாமல் இடையூறுகள் வரும். உறவினர்கள் இடத்தில் இருந்து  வரும் உதவி ஏமாற்றத்தை கொடுக்கும். சகோதரிகளுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோக வளர்ச்சிக்கான எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

Categories

Tech |