Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! முயற்சிகளில் கைகூடும்..! பிரச்சனைகள் தீரும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

கடந்தகால சிரமங்கள் அனைத்துமே விலகி செல்லும். உங்களின் மனதை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடும். செய்கின்ற செயலிலும் நீங்கள் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதில் நிறைவேறும். இன்று உங்களுக்கு பண வருமானம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் செய்கின்ற செயலில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்களுக்கு முன்னேற்றகரமான நாளாகவே இருக்கிறது. இன்று நீங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறந்தது. இன்று உங்களுக்கு பெரியோரின் பாராட்டுக்கள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பொறுப்பான இடத்திற்கு நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

திருமணம் போன்ற சுப காரிய மான பேச்சுக்கள் உங்கள் இல்லத்தில் நடைபெறும். முயற்சியில் சிலர் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மற்றவரின் பிரச்சினையில் நீங்கள் தயவுசெய்து தலையிட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் நீங்கள் பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுகமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிட்டும். இன்று மாணவ மாணவியர்கள் கல்வியில் ஆர்வம் அதிகரித்து இருப்பார்கள். மேற் கல்விக்காக பயிலும் மாணவர்கள் சிறிது முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |