மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் மனதில் உணர்ச்சிபூர்வமான எண்ணங்கள் ஓடும்.
உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்களின் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்களின் பதற்றத்தை குறைக்கலாம். வேலை தொடர்பான பயணம் இன்று காணப்படும். கூடுதல் பணிகள் உங்களுக்கு சுமையாக தெரியும். இன்று உங்களின் துணையிடம் அகந்தை போக்கை காண்பீர்கள். உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்பட நட்பான அணுகுமுறை மற்றும் திறந்த பேச்சு அவசியமாகும். அதிக பொறுப்புகள் காரணமாக இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று சிறிது பதட்டமாக இருப்பீர்கள். நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.