Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பராமரிப்பு தேவை..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
சிலர் உங்களிடம் உதவிகள் கேட்டு அணுக கூடும்.

உங்களால் இயன்ற உதவியை நீங்கள் அவர்களுக்கு செய்து கொடுப்பீர்கள். இன்று உங்களுக்கு நல்ல எண்ணங்களை வரும். இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலைகளில் உங்களுக்கு சில பிரச்சனைகளும் வர நேரிடும். பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களால் முடிந்தால் வெண்பூசணி சாறு குடிப்பது மிகவும் சிறந்தது ஆரோக்கியத்தை பராமரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக
நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் தேவை. இன்று உங்களின் பேச்சுக்கு அனைவரும் எதிர்வினையாற்ற கூடும். கணவன் மனைவிக்கு இடையில் மனம் விட்டுப் பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் சிறப்பாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்லக்கூடும். நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடும்பொழுது விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. பதவி உயர்வு வருவதற்கு சிறு தாமதங்கள் வரக்கூடும்.

பணிச்சுமை அதிகரிப்பதால் நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இறை நம்பிக்கை அதிகரிக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு
இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் விளையாட்டிலும் ஜொலி ஜொலித்து காணப்படுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |