கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் நாளாக இருக்கிறது.
உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கிறது. தேவைகள் கூட கண்டிப்பாக பூர்த்தி அடையும். தொழில் வளர்ச்சிக்கு எதிர்த்தவர்கள் இன்று விலகிச் செல்வார்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் தனலாபம் உண்டாகும். பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு கூடும். தொழில் வியாபாரத்தில் இன்று வெற்றியடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
இன்று நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக்கூடும். இன்று உங்களுக்கு வி. ஐ .பி களின் சந்திப்பு கிட்டும். திருமண முயற்சி மேற் கொள்பவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
இன்றைய நாளில் உங்களுக்கு கனவுத் தொல்லை அதிகரிக்கும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளியப்படும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். அலட்சியம் மற்றும் படபடப்பை தவிர்ப்பது சிறந்தது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று சகோதர சகோதரிகளின் ஒற்றுமையும் வலுப்படும். பூர்வீக சொத்துக்களில் உள்ள வில்லங்கங்கள் சரியாகிவிடும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இந்த நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் கரும் நீலம் மற்றும் இளம் நீலம் நிறம்.