துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாளாக இருக்கிறது.
உடன்பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவு குறைவு கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். பொருளாதாரம் ஓரளவு சிறப்பு அடையும். இன்று கடன் தொடர்பான பிரச்சினைகள் ஓரளவு தீர்ந்துவிடும். கடன் பிரச்சினை ஓரளவு கட்டுக்குள் அடையும். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பண வரவு சீராகவே உள்ளது.
மனக்குழப்பத்திற்கு மட்டும் தான் நீங்கள் தீர்வு காண வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து சிந்தித்து செயல்படுவது சிறந்தது. சின்ன
விஷயத்திற்கு கூட அதிகமாக கோபம் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் நாளாக இருக்கிறது. நீண்ட நாட்கள் வேலை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். உங்களுடைய சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். அதைப் போல உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பயணங்கள் சொல்லும் பொழுது கவனம் தேவை. பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்து செல்ல வேண்டாம். கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும். அமைதியாக இருந்தால் எந்த பிரச்சினையும் வராது.
காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும்.
இருந்தாலும் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.