நாளைய பஞ்சாங்கம்
02-06-2022, வைகாசி 19, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 12.17 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.04 வரை பின்பு புனர்பூசம்.
மரணயோகம் மாலை 04.04 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 02.06.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். தொழில் ரீதியாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.
கடகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பெரியவர்களுடன் வாக்குவாதங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தையில் சாதகமான பலன் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைபடலாம். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் நிதானம் தேவை.
தனுசு
உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் உதவி எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு நல்லது.