கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் ஞானம் நிறைந்த சிந்தனை வரும்.
இன்று உங்களுக்கு இறைவழிபாட்டின் மீது அதிகளவு நாட்டம் உள்ளது. ஆரோக்கியத்தில் அதிகளவு நாட்டம் கொள்வீர்கள். இன்று நீங்கள் பெறுகின்ற அனுபவம் உங்களுக்கு புது விதமாக இருக்கும். இன்று உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் விரிவடையும். இன்று நீங்க நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் தீர்ந்துவிடும். அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலை செல்வம் கிட்டும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
சமையல் செய்யும் பொழுது மற்ற வேலை செய்யும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் சிந்தனையை ஒருநிலை படுத்தி கொள்ள வேண்டும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். வீண் அலைச்சலை நீங்கள்தான் குறைத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் சுற்றுவதை குறைத்து கொண்டால் உடலில் ஆரோக்கியம் பெருகும். உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் செய்கின்ற செயலில் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சமூக அக்கறையுடன் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன் கைகூடும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையக்கூடிய நாளாக இருக்கிறது.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்கள் ஆசிரியரின் சொல்படி கேட்டு முன்னேற்றம் அடைவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் படித்த பாடத்தை படித்து பின் எண்ணிப் பார்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.