Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! அன்பு பெருகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானம் இருக்கும்.

நீங்கள் எந்த செயலை எடுத்தாலும் திருப்தியாக முடிப்பீர்கள்.பொறுமையுடன் எந்த ஒரு செயலையும் அணுகுவீர்கள். இன்று நீங்கள் உணர்ச்சிவசப் படாமல் இருந்தால் உறவினரிடம் பகை ஏற்படாமல் இருக்கும். சில நபர்கள் உங்களைக் கோபப்படுத்தும் படி நடந்து கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது. விரும்பிய பயணம் விலகிப் போகலாம்.
பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கசப்பு ஓரளவு சரியாகிவிடும். உங்கள் பிள்ளைகள் உங்களுடைய அன்பை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

தேவையில்லாத முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் சிந்தித்து செலவு செய்வது சிறந்தது.
இன்று உங்களுக்கு பண வரவு திருப்திகரமாக சூழ்நிலையே இருக்கிறது.
மனம் போதும் என்ற நிலையில் இருக்கும்.
வெளியூர் பயணம் செல்லும் பொழுது மிகவும் கவனம் தேவை. பயணங்களில் சில பல தடைகள் வரத்தான் செய்யும் நீங்கள் தடைகளை தகர்த்து முன்னேறுவீர்கள். இன்று நீங்கள் சுற்றுலாக்கள் செல்லலாம் என்று திட்டங்கள் தீட்டுவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்று வரலாம் என்ற திட்டமும் தீட்டுவீர்கள். இன்று உங்களுக்கு ஆன்மீகத்திலும் தெய்வ பக்தியும் அதிகரிக்கும். நீங்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியத்தை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |