Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
எண்ணம் போன்ற வாழ்க்கை என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டு வாழ்வீர்கள்.

நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கையில் நீங்கள் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் தொடங்க இருப்பதால் எதிலும் கவனம் தேவை. கோபத்தை தவிர்த்து பேச்சில் கவனம் முக்கியமாக தேவை. நீங்கள் யாருக்கும் எவ்விதமான வாக்குறுதிகளும் கொடுக்கக்கூடாது. யாருக்கும் எந்தவிதமான ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். இன்று நீங்கள் பணம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு தொலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். அந்நிய தேச தொடர்பு உங்களுக்கு அனுபவத்தை அளிக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

இன்று நீங்கள் சில பயணங்களும் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் தான் இருக்கும்.
ஆனால் கடன் சார்ந்த விஷயங்களை நீங்கள் பேசும் பொழுது கவனம் தேவை.
வியாபாரங்களில் அதிகப்படியான போட்டிகள் நிலவும். இன்று நீங்கள் போட்டிகளைத் தாண்டி தான் வெற்றி அடைவீர்கள்.‌ நீண்ட நாள்கள் இழுபறியான இருந்த செயல் இன்று நல்லபடியாக முடியும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள்.
இன்று உங்களுக்கு திடீர் பணத் தேவை ஏற்படும். இன்று உங்களுக்கு பணத் தேவை பூர்த்தி அடையும் சில அதிர்ஷ்டமான வாய்ப்புகளும் உள்ளது.
மனைவியிடம் எங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மனைவி வீட்டில் இருந்து உங்களுக்கு பணம் வரவிற்கு வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் கூட உங்களை நன்றாக புரிந்து நடந்து கொள்வார்கள்.
சந்திராஷ்டம தினமாகும் தான் உங்களுக்கு சில பிரச்சினைகளை அளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
இன்று நீங்கள் எள் சேர்த்த சாதத்தை நீங்கள் காகத்திற்கு வைப்பது உங்களுக்கு நல்ல பயனைப் பெற்றுக் கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிஷ்டமான திசை தென் கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |