மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கிறது.
இன்று உங்களுக்கு நல்ல எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்கள் மீது நம்பிக்கை உண்டாகும். சுயமாக சிந்தித்து நீங்கள் செயல்படுவீர்கள். இன்று வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேலை செய்யும் தொழிலாளர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று உங்கள் பிள்ளைகள் அது உங்களுக்குப் பெருமை சேரும். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். கல்விக்காக சிறிது செலவு செய்ய நேரிடும். புதிய நண்பர்கள் உங்களுக்கு இன்று கிடைக்கக்கூடும். உங்களுக்கு உதவிகள் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். சில விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு இறை வழிபாடு மிகவும் அவசியமாகும்.
பணம் சம்பாதிக்கும் திறமை மட்டுமே உங்களிடம் வெளிப்படும். இன்று உங்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும்.
இன்று நீங்கள் விழிப்புடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
இன்று நீங்கள் இறை வழிபாட்டின் காரியங்கள் கைகூடும். ஏதோ ஒரு விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். ஒருநாள் உங்களுக்கு அதற்கான விடை கிடைத்துவிடும். நீங்கள் பொறுமையாகவும் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நபர்களிடம் எந்த ஒரு பேச்சும் கொடுக்காமல் இருப்பது சிறந்தது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். பிரச்சினைகள் கூட ஓரளவு சரியாகிவிடும். நாவடக்கம் என்பது கண்டிப்பாக தேவை. மாணவக் கண்மணிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் அவசியம். படிப்பிற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாடங்களை கற்று பின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. ஆசிரியரிடம் கேட்டு படிப்பது மிகவும் சிறந்தது. இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு வைப்பது உங்களுக்கு நல்ல பலன் பெற்றுக் கொடுக்கும். முக்கியமான பணிகளை செய்யும் போது மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.