கன்னி ராசி அன்பர்களே..!
இன்று பெண்களால் லாபம் உண்டாகும்.
பெண்கள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். அனைத்து வகையிலும் ஏற்றம் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். யாருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். இறைவனின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினையில்லாத வாழ்க்கை அமையும். தாய், தந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும்.
தேவையில்லாத விஷயங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மாணவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 2.
அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.