ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பொறுமையை பேணவேண்டும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். தாய்க்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபம் உண்டாகக்கூடும்.
அக்கம்பக்கத்தினரிடம் கவனமாக பேச வேண்டும். பிரச்சனையை தவிர்த்துவிட்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.