கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும்.
கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். யார் மீதும் கோபம் படவேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வங்கி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
காரியங்களை மேற்கொள்ளும் பொழுது தடைகள் உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.